தலைவரின் செய்தி

முதற்பக்கம் > தலைவரின் செய்தி

தலைவரின் செய்தி

சிலேன் ஸ்ட்டீல் குழு

உலகின் எந்தவொரு போட்டியாளரையும் எதிர்கொள்ளத்தக்க சக்தி மற்றும் ஆற்றலை இலங்கை தன்னகத்தே கொண்டுள்ளது.

ஓர் உற்பத்தியாளர் என்ற வகையில் இலங்கையை நான் மிகவும் சிறந்த சந்தர்ப்பங்களை பெற்றுக் கொடுக்கும் ஒரு தேசமாகவே கருதுகின்றேன். இவ் உண்மையினை நான் இலங்கையில் இருக்கும் போதன்றி இலங்கைக்கு வெளியெ இருக்கும்போதே உணர்ந்து கொண்டேன்.

வளங்கள் எமது நாட்டிலன்றி வெளிநாடுகளிலேயே உள்ளது என 80 களில் நான் மட்டுமன்றி அநேகமான இளைஞர்களும் எண்ணி வெளிநாடு சென்றோம். அன்று தொட்டு இன்று வரை வர்த்தகத் துறையிலும் உற்பத்தியாளர் என்ற வகையிலும் நான் பெற்றுக்கொண்ட வெற்றிகள் அநேகமானவை. அதனாலோ என்னவோ மிகவும் உறுதியுடன் என்னால் அனைவருக்கும் கூறக்கூடிய விடயம் தான் நாம் எமது தாய் மண்ணிலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய விடயங்கள் இன்னோரன்னவை. இவற்றை முறையாகவும் நெறிப்படுத்துகையுடனும் நாம் மேற்கொண்டால் நாட்டை செழிப்பானதாகவும் வளமானதாகவும் இலகுவில் மாற்ற முடியும்.

இந்த முழுமையான நம்பிக்கையுடனே நான் எனது தாய் நாட்டில் எனது நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டேன்.

வர்த்தகத் துறையின் ஜாம்பவான்களுடன் போட்டியிட்டு நான் வெற்றி பெற்றமையானது வெளிநாட்டில் பெற்றுக்கொண்ட ஒரு சில அனுபவங்களினாலாகும், அவ்வாறெனின், கல்வியாற்றல் மிக்க திறமைகள் மிகுந்த எமது இளம் தலைமுறையினரைக் கொண்ட எனது தாய் மண்ணை எவ்வாறெல்லாம் செழிப்படையச் செய்ய முடியும்.

தாய் மண்ணுக்குத் திரும்பியதும் எனது முதல் செயற்பாடாக கொரிய நாட்டு நிறுவனமொன்றுக்கு சொந்தமாகி இருந்த விற்பனைக்கு தயாராகவிருந்த சிக்கொ எனும் பெயரிலிருந்த லங்கா வானே நிறுவனத்தை கொள்வனவு செய்ததையே மேற்கொண்டேன். இது 2009 ஆம் ஆண்டு இடம்பெற்றது. தாய் நாட்டுக்கு சொந்தமான இலங்கையிடமிருந்து அந்நிய நாட்டுக்கு சொந்தமாகியிருந்த உருக்கு ஜாம்பவானை மீண்டும் தாய் மண்ணுக்கே ஒப்படைக்க கிடைத்தமையானது கிரீடத்திலிருந்து அகற்றப்பட்ட மாணிக்கத்தை மீண்டும் கிரீடத்தில் பொறுத்தியதைப் போன்றதாகும். தேசத்தை வலுவூட்டும் உருக்கு மீண்டும் சிலோன் ஸ்ட்டீல் கோப்பரேஷன் எனும் பெயர் சூடப்பட்டது. அத்துடன் ரிஜிட் டயர் கோப்பரேஷன் லிமிட்டட் நிறுவனம் ஹொரணையில் நிறுவப்பட்டதுடன், அதன் முதல் உற்பத்தித் தொகை ஏற்கனவே சந்தைக்கு வந்துவிட்டது என்பதையும் பெருமிதத்துடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். ஹம்பாந்தோட்டை லங்வா சங்ஸ்தா சீமேந்து கூட்டத்தாபனம் எனது மூன்றாவது விளை நிலமாகும். அதிலே அடுத்த வருட ஆரம்பத்தில் உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம், நிச்சயமாக இது எமது நாட்டின் பொருளாதார விருத்திக்கு உந்து சக்தியாக அமையும் என நம்புகின்றேன்.

இவற்றின் ஊடாக நாட்டின் தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி ஒன்றிணைந்து நாம் அனைவரும் எமது தேசத்தின் எதிர்கால வெற்றிப் பயணத்தக்காக கை கோர்த்து நிலையான அபிவிரத்திக்குரிய எமது பங்களிப்பை பெற்றுக்கொடுப்பதற்காக எனது அனைத்து மகன்களும் மகள்களும் உங்கள் திறன் மற்றும் ஆற்றல்களை வெளிநாட்டில் உபயோகப்படுத்தாது எமது நாட்டின் எதிர்கால வெற்றிக்காக பயன்படுத்த முன்வாருங்கள் உங்களுக்கு சிறந்த பெறுமதியினை பெற்றுத்தர உங்கள் தாய் நாடு தயாராக இருக்கின்றது.

அப்போது தான் எமக்கு எமது நாட்டை விரைவாக சமூக, பொருளாதார மற்றும் தொழில் ரீதியாக முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல மடியும்.

steel sri lanka
திரு. நந்தன லொக்குவித்தான