முன்னோடியின் சுயசரிதை
அரசாங்கத்தக்கு உரித்தான நிறுவனம் என்றவகையில், சிலோன் ஸ்ட்டீல் கோப்பரேஷன் நிறுவனமானது இலங்கையின் பொருளாதார முறையில் பாரிய மாற்றத்தை எற்படுத்தியவாறு விவசாயத்தில் தங்கியுள்ள நாடு எனும் வகையில், உருக்கு (260 ரக தட்டையான உருக்குக் கம்பிகள்) உற்பத்தித் துறைக்கு காலடி எடுத்து வைத்து நவீன முறையில் உருக்கு உற்பத்திகளை உற்பத்தி செய்வதற்கான உற்பத்தி ஆலையை 1960ஆம் ஆண்டு நிறுவ ஆரம்பித்தது.
கொங்ரீட் வேலைகளுக்குத் தேவையான உருக்குக் கம்பிகளை உற்பத்தி செய்யும் நடவடிக்கையுடன் ஆரம்பித்தாலும், காலத்தின் தேவையடிப்படையில், ஏனைய கம்பி வகைகள் மற்றும் வயர்களை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டது. முக்கியமாக இவையனைத்தும் ரஷ்ய அரசாங்கத்தின் முழுமையான உதவியுடனே ஆரம்பிக்கப்பட்டதென்பது விசேட விடயமாகும்.
உற்பத்தியின் முன்னோக்கிய பயணத்தில் TOR கம்பிகள் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணிகளுக்கான அடுத்த கட்ட நகர்வை , இலங்கையின் முதலாவது அங்கீகாரம் பெற்ற நிறுவனம் எனும் அடிப்படையில் சிலோன் ஸ்ட்டீல் எடுத்து வைத்தது. கட்டட நிர்மாணத் துறையில் இது ஒரு பாரிய முன்னேற்றமாகவே அக்காலத்தில் கருதப்பட்டது. ஏனெனில், சூடாக சுருட்டப்பட்ட, குளிர் முறுக்கு கம்பிகள் அக்காலத்தில் பெரு மதிப்பை பெற்றிருந்தது.
பின்னர், அரசாங்கத்துக்கு உரித்தாகவிருந்த நிறுவனம் 1993 ஆம் ஆண்டு உரித்து மற்றும் முகாமைத்துவம் என்பவற்றின் அடிப்படையில் தனியார் நிறுவனமாகவும், 1996 ஆம் ஆண்டு கொரிய நாட்டு நிறுவனத்துக்கு சொந்தமான நிறுவனமாகவும் மாற்றப்பட்டது.
எனினும் 2009 ஆம் ஆண்டு மீண்டும் உரித்து மற்றும் முகாமைத்துவம் தற்போதுள்ள நிலைக்கு மாற்றப்பட்டதுடன், மிகவும் பெருமிதத்துடன் சிலோன் ஸ்ட்டீல் கோப்பரேஷன் லிமிட்டட் எனும் பெயருடன் லங்வா சங்ஸ்தா வானே எனும் வரத்தக நாமத்தில் தேசத்தை வலுவூட்டும் உருக்கு எனும் தொனிப்பொருளுடன் இயங்கிக்கொண்டிருக்கின்றது.